மாரியம்மன் தெப்பக்குளத்தில் மீண்டும் படகு சவாரி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சவாரியைத் தொடங்கிவைத்து பயணம் செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அருகில் ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர். படம்: ஆர். அசோக்
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சவாரியைத் தொடங்கிவைத்து பயணம் செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அருகில் ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர். படம்: ஆர். அசோக்
Updated on
1 min read

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத் தில் படகு சவாரியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: மீனாட்சி யம்மன் கோயிலின் உப கோயி லான மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் 50 ஆண்டு களுக்கு பிறகு நீர்வரத்து கால் வாய் தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் படகு சவாரி விடப்பட்டுள் ளது.

தெப்பக்குளத்தில், கடந்த 10 மாதங்களுக்கும் மேலாகத் தண்ணீர் வற்றாமல் உள்ளதைக் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இதனைச் சுற்றுலாத் தலமாக மாற்றி மாநகராட்சிக்கு வருமானம் ஈட்டும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். படகில் பாதுகாப்பாக பயணம் செய்ய உயிர்காப்பு மிதவை, பாதுகாப்பு கவச உடை மற்றும் நீச்சல் தெரிந்த வீரர்களும் இருப்பார்கள் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன், மீனாட்சி யம்மன் கோயில் இணை ஆணை யர் க.செல்லதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மதுரை மத்திய தொகு திக்கு உட்பட்ட 11, 79, 84 மற்றும் 85-வது வார்டு பகுதிகளில் ரூ.40.80 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைச்சர் திறந்து வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in