திமுக - பாஜக கூட்டணியா? - கோவையில் தமிழிசை மறுப்பு

திமுக - பாஜக கூட்டணியா? - கோவையில் தமிழிசை மறுப்பு
Updated on
1 min read

திமுக - பாஜக கூட்டணி என அதிகாரப்பூர்வமற்ற வகையில் செய்திகள் வெளியாவது யூகங்கள் மட்டுமே என மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ‘மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட், பல்வேறு வசதிகளை கொண்ட ‘மக்களுக்கான பட்ஜெட்டாக’ இருக்கும். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வலுவான கூட்டணியை அமைத்து பாஜக போட்டியிடும். இந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜக அங்கம் வகிக்காத எந்தக் கூட்டணியும் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாது.

திமுக - பாஜக கூட்டணி என அதிகாரப்பூர்வமற்ற வகையில் செய்திகள் வெளியாவது யூகங்கள் மட்டுமே. இவை பாஜகவின் வியூகம் அல்ல. தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி குறித்து கட்சி மேலிடப் பொறுப்பாளர்கள் முடிவு செய்வர். தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட இருக்கும் இடைக்கால பட்ஜெட்டில், பூரண மதுவிலக்கு அல்லது படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து தமிழக முதல்வர் முறை யாக அறிவிப்பு வெளியிட வேண்டும்’ என்றார்.

வாக்காளர் பட்டியலில், சென்னையில் மட்டும் ஒன்றரை லட்சம் போலி வாக்காளர்கள் எப்படி இடம் பெற்றார்கள் என கேள்வி எழுப்பிய தமிழிசை சவுந்திர ராஜன், தேர்தலை நேர்மை யாக நடத்தவும், போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு போலி வாக்காளர்கூட இடம் பெறக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in