கும்பகோணம் மாநகராட்சியுடன் சுவாமிமலை பேரூராட்சியை இணைக்க எதிர்ப்பு: வியாபாரிகள் கடையடைப்பு

சுவாமிமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வணிகர் சங்கத்தினர்.
சுவாமிமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வணிகர் சங்கத்தினர்.
Updated on
1 min read

கும்பகோணம் மாநகராட்சியுடன் சுவாமிமலை பேரூராட்சியை இணைப்பதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாக திகழ்ந்து வரும் சுவாமிமலை பேரூராட்சி, தற்போது தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வருவாய்த்துறை மானிய கோரிக்கையின் போது, கும்பகோணம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த புதிய மாநகராட்சியோடு சுவாமிமலை பேரூராட்சியை இணைக்க இருக்கும் முடிவைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, தொடர்ந்து சுவாமிமலை பேரூராட்சியாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என, சுவாமிமலை வியாபாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இக்கோரிக்கையை தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில், இன்று (ஆக. 29) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுவாமிமலையில் அடையாள கடையடைப்பு நடத்துவது என வியாபாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, சுவாமிமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுவாமிமலை கடை வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி சுவாமிமலையில் வர்த்தக சங்கத்தினர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in