கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் வசந்தகுமார் மணிமண்டபம், சிலை திறப்பு: `காங்கிரஸின் விடிவெள்ளி’ என கே.எஸ்.அழகிரி புகழாரம்

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமாரின் மணிமண்டபத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்தார். அருகில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத், வசந்தகுமாரின் மனைவி தமிழ்செல்வி, மகன்கள் எம்பி விஜய் வசந்த்,  வினோத்குமார், மகள் தங்கமலர் மற்றும் குடும்பத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமாரின் மணிமண்டபத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்தார். அருகில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத், வசந்தகுமாரின் மனைவி தமிழ்செல்வி, மகன்கள் எம்பி விஜய் வசந்த், வினோத்குமார், மகள் தங்கமலர் மற்றும் குடும்பத்தினர்.
Updated on
1 min read

``தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் விடிவெள்ளியாக வாழ்ந்து மறைந்தவர் வசந்தகுமார்” என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்பியும், வசந்த் அன் கோ நிறுவனருமான எச்.வசந்தகுமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது குடும்பத்துக்கு சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு அவருக்கு மணிமண்டபமும், நுழைவுவாயிலில் முழுஉருவச் சிலையும் அமைக்கப்பட்டுஉள்ளது.

வசந்தகுமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினமான நேற்றுமணிமண்டபம், சிலை ஆகியவற்றை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்தார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் வல்ல பிரசாத் முன்னிலை வகித்தார். வசந்தகுமாரின் மகனும், கன்னியாகுமரி எம்பியுமான விஜய் வசந்த் வரவேற்றார்.வசந்தகுமாரின் மனைவி தமிழ்செல்வி, மகன் வினோத்குமார், மகள் தங்கமலர் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், ரூபி மனோகரன், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், தாரகை கத்பட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்ற தமிழககாங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் விடிவெள்ளியாக வாழ்ந்து மறைந்த வசந்தகுமாரின் நினைவுஎங்களால் போற்றி பாதுகாக்கப்படுகிறது. அவரது குடும்பத்தினரும் மிகுந்த நெகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

ேகாடநாடு விவகாரத்தில் விசாரணை நடத்தக் கூடாது என்று அதிமுகவினர் கூறுவது தவறு. ஒரு சந்தேகமோ, குற்றச்சாட்டோ அவையில் எழுந்தால் அதற்கு பதிலளிக்க தயாராக இருப்பதாக அதிமுக பேராண்மையோடு நடந்திருக்கவேண்டும். விசாரிக்கவே கூடாது, கேட்கவே கூடாது எனசொல்வது ஏற்கக்கூடியது அல்ல.

வேளாண் மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசை பாராட்டுகிறேன். பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்பதை கண்டித்து காங்கிரஸ் போராட்டங்களில் ஈடுபடும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in