நிறுவனர் பாரிவேந்தர் பிறந்தநாளை முன்னிட்டு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் கல்வி வழிகாட்டி தினம் கொண்டாட்டம்: ‘தி இந்து’ குழுமத்துடன் இணைந்து நடத்தப்பட்ட வெப்பினார்களுக்கு பாராட்டு

நிறுவனர் பாரிவேந்தர் பிறந்தநாளை முன்னிட்டு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் கல்வி வழிகாட்டி தினம் கொண்டாட்டம்: ‘தி இந்து’ குழுமத்துடன் இணைந்து நடத்தப்பட்ட வெப்பினார்களுக்கு பாராட்டு
Updated on
1 min read

எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (SRMIST) நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தரின் பிறந்தநாள் கடந்த 24-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் கல்விவழிகாட்டி தினம் கொண்டாடப்பட்டது.

‘தி இந்து’ குழுமத்துடன் இணைந்து, மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இணைய வழியில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘எஸ்ஆர்எம் விர்ச்சுவல் கான்கிளேவ்’ தொடர் வெப்பினார்களுக்கு இந்நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மெய்நிகர் முறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பாரிவேந்தர் பேசும்போது, ‘‘எஸ்ஆர்எம் குழுமக் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத மாணவர்களுக்கு ஏற்கெனவே கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களிலும், ‘தி இந்து’ குழுமத்துடன் இணைந்து, தகுதியான மாணவர்களைக் கண்டறிந்து அங்கீகரிக்கும் நமது பணி தொடரும்’’ என்றார்.

நிகழ்ச்சியில், சிறந்த மாணவர்கள் 2 பேருக்கு டி.ஆர்.பாரிவேந்தர் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. அவர்களுக்கு பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்தார்.

துணைவேந்தர் சி.முத்தமிழ்ச்செல்வன் பேசும்போது, ‘‘அடுத்துஎன்ன, எங்கு படிப்பது என்ற குழப்பத்தில் இருக்கும் மாணவர்கள், பெற்றோருக்கு இந்த வெப்பினார்கள் தெளிவாக வழிகாட்டுகின்றன. இப்பணியை தொடர்ந்து மேற்கொள்வது அவசியம். நம் கல்வி நிறுவனத்தில் இதற்காக தனி துறையே செயல்படுகிறது’’ என்றார்.

15 பிரிவுகளாக நடந்த வெப்பினார்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பதிவுசெய்து, பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

‘தி இந்து’ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி எல்.வி.நவநீத் பேசும்போது, ‘‘அனைத்து மாணவர்களுக்கும் கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும். மாணவர்கள் சிறப்பான உயர்கல்வியை தேர்வு செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து வெப்பினார் நடத்தப்பட்டது நல்ல வரவேற்பை பெற்றது. யூ-டியூப்பிலும் வெளியிட்டதால், பரவலாக மாணவர்களை சென்றடைந்தது’’ என்று கூறினார். இந்த வழிகாட்டி நிகழ்ச்சிக்கு ‘இந்து தமிழ் திசை’ மீடியா பார்ட்னராக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in