Published : 29 Aug 2021 03:13 AM
Last Updated : 29 Aug 2021 03:13 AM

நைரோபியில் நடந்த சர்வதேச இளையோருக்கான தடகளப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற விழுப்புரம் வீரருக்கு பாராட்டு: தேவையான அரசு உதவிகளை செய்ய ஆட்சியர் உறுதி

நைரோபியில் நடந்த யு-20 தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற விழுப்புரம் வீரர் பரத் ஸ்ரீதரனை ஆட்சியர் மோகன், எஸ்பி ஸ்ரீநாதா உள்ளிட்டோர் பாராட்டுகின்றனர்.

விழுப்புரம்

கென்யா தலைநகர் நைரோபியில் நடந்த உலக இளையோர் தடகளப் போட்டியில் விழுப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் பரத் ஸ்ரீதரன்வெண்கலப் பதக்கம் வென்றுள் ளார். அவருக்கு மாவட்ட நிர்வாகம்சார்பில் பாராட்டு தெரிவிக்கப் பட்டது.

கென்யா தலைநகர் நைரோபி யில் நடந்த 20 வயதுக்கு உட்பட்ட (யு 20) உலக இளையோர் தடகளப் போட்டியில் இந்தியா 5 பதக்கங்களைக் குவித்துள்ளது. இதில் விழுப்புரத்தைச் சேர்ந்த பரத் ஸ்ரீதரன், கலப்பு 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டு, வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

சென்னையில் இருந்து நேற்று ரயில் மூலம் விழுப்புரத்துக்கு வந்த அவரை நகர மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வரவேற்றனர்.

தொடர்ந்து, அங்கிருந்து ஊர்வலமாக வந்த அவர் தேசத் தலைவர்கள் சிலைக்குமாலை அணிவித்து, ஆட்சியர் அலுவலகத்தைச் சென்றடைந்தார்.

அங்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசளிப்பு மற்றும் பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, நகர் மன்ற முன்னாள் தலைவர் ஜனகராஜ், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பதக்கம் வென்ற பரத் ஸ்ரீதரனைப் பாராட்டிப் பேசினர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் மோகன், “சர்வதேச அளவில் வெண்கலப் பதக்கம் வென்ற பரத் ஸ்ரீதரன் மேலும் சாதனைகளைப் படைக்க வேண் டும். அவருக்குத் தேவையான உதவிகளை செய்ய, தமிழக அரசுகதவுகளை திறந்து வைத்து காத்துக்கொண்டிருக்கிறது” என்றார்.

வெண்கலப் பதக்கம் வென்ற பாரத் ஸ்ரீதரன் கூறியதாவது:

சென்னை தனியார் கல்லூரியில் பி.ஏ படித்து வருகிறேன்.கஷ்டப் பட்டு என்னை பெற்றோர் படிக்கவைத்து வருகின்றனர். இளம் வயதி லேயே விளையாட்டில் ஆர்வம் உண்டு. கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரின் உறுதுணையால் ஏற்கெனவே மாநில அளவில் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக தங்கப் பதக்கம் வென்றேன். இடையில் 2 ஆண்டுகளாக பயிற்சியை நிறுத்திய நான், மீண்டும் அதில் தீவிர கவனம் செலுத்தினேன்.

தடகளப் போட்டியில் பயிற்சி பெறவும், வெளி மாநிலங்களுக்குச் செல்ல விமான டிக்கெட்டுக்கு பணம் இல்லாமலும் கஷ்டப் பட்டிருக்கிறேன். பெற்றோர் நகை களை அடகு வைத்து அனுப்பி வைப்பது உண்டு.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் முன்பு சிறிய காயம் ஏற்பட்டது, என்னை, ‘பங்கேற்க வேண்டாம்’ என்று கூறினர். ஆனால், போட்டியில் பங்கேற்பதில் உறுதியாக இருந் தேன். தற்போது, நைரோபியில் வெண்கலப் பதக்கம் வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது லட்சியம் ” என்று தெரிவித்தார்.

அரசு சார்பில் நடந்த இந்த பாராட்டு நிகழ்வில் பரத் ஸ்ரீதரனின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x