Published : 28 Aug 2021 03:13 AM
Last Updated : 28 Aug 2021 03:13 AM
செப்.1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மேலும் 7 மாணவிகளுக்கு நேற்று கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் இக்கல்லூரியில் பயில்கிறார்கள். கரோனா ஊரடங்கு தளர்வுகளை அடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு நேரடி வகுப்புகள் தொடங்கின. கல்லூரிவிடுதியில் மாணவிகள் தங்கியுள்ளனர். விடுதியில் 24-ம் தேதி ஒருமாணவிக்கும், நேற்று முன்தினம் 4 மாணவியருக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, மாணவ - மாணவியர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நேற்று முன்தினம் தொடங்கியது. 200 மாணவிகளுக்கான பரிசோதனை முடிவு நேற்றுவெளியானது. அதில், விடுதியில் தங்கியிருந்த மேலும் 7மாணவிகளுக்கு தொற்று கண்டறியப்பட்டது. அம்மாணவிகள் கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 12 பேருக்குமே எந்த அறிகுறியும்இல்லாமல், கரோனா இருந்துள்ளது ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, திருநெல்வேலி மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், அரசகுமார் மேற்பார்வையில், கல்லூரி மற்றும் விடுதி வளாகங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாணவிகள் தங்கியிருந்த விடுதிகட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, வெளியாட்கள் உள்ளே செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பதாகை வாயிலில் கட்டப்பட்டது. மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையர் ஜஹாங்கீர், மாணவிகளுக்கு கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கல்லூரியில் மாணவ - மாணவியர் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்கவும், கைகளை அவ்வப்போது சுத்தமாக கழுவவும், சமூக விலகலை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் மாணவ -மாணவியருக்கு மட்டுமின்றி மருத்துவமனை ஊழியர்கள், காவலர்கள், உள்நோயாளிகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், மேலும், 40 மாணவிகள் இன்னும் தடுப்பூசி போடவில்லை என்பதால் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT