Published : 28 Aug 2021 03:14 AM
Last Updated : 28 Aug 2021 03:14 AM

மதுரையில் ‘நிழல் இல்லா நாள்’ நிகழ்வு : பார்த்து மகிழ்ந்த கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள்

அமெரிக்கன் கல்லூரியில் நடந்த நிழல் இல்லாத நாள் நிகழ்ச்சி.

மதுரை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நேற்று “நிழல் இல்லா நாள்” நிகழ்வு மதுரையின் பல் வேறு இடங்களில் நடந்தன.

இந்நிகழ்வு ஆண்டுக்கு இரண்டு முறை நிகழும். இந்த ஆண்டின் முதல் நிகழ்வு கடந்த ஏப்ரலில் நடந்தது. இரண்டாவது நிகழ்வு மதுரையில் நேற்று நண்பகல் 12:19 மணிக்கு நடந்தது. இதனை தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினர்கள் மூலம் முத்துபட்டி, காமராசர் பல்கலைக்கழக கல்லூரி வளாகம், அவுட் போஸ்ட், சேர்மத்தாய் வாசன் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, வளச்சிகுளம், பூலாம் பட்டி, பல்கலை. நகர் ஆரம்பப் பள்ளி, பஞ்சாயத்து யூனியன் பள்ளி, சிட்டம்பட்டி, ஆனையூர் அரசு உயர்நிலைப் பள்ளி போன்ற இடங்களில் பொதுமக்களிடம் விளக்கி காண்பிக்கப்பட்டது.

மதுரை அமெரிக்கன் கல் லூரியில் நிழல் இல்லாத நாளை குறிக்கும் வகையில், பல்வேறு மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன. 12.19 மணிக்கு சூரியன், தலைக்கு நேர் உச்சிக்கு வரும்போது நிழல் தெரியவில்லை. அதை மாண வர்கள் நேரடியாகப் பார்த்தனர். அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், தமிழ்நாடு தொழில்நுட்பக் கழக அறிவியல் அலுவலர் இ.கி.லெனின் தமிழ் கோவன், அறிவியல் பலகை விஞ் ஞானி குமார், இயற்பியல் துறை பேராசிரியர் ஸ்டீபன் இன்பநாதன், விலங்கியல் துறை பேராசிரியர் ராஜேஷ் கலந்துகொண்டனர்.

மதுரை விரகனூர் அருகில் உள்ள கொண்டபெத்தான் அரசு நடுநிலைப் பள்ளி சார்பில், சந்திர லேகா நகர் மந்தையில் நிழல் இல் லாத நாள் அறிவியல் நிகழ்வு நடந்தது. தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். ஆசிரியர் பீட்டர் முன்னிலை வகித் தார். அறிவியல் ஆசிரியை ஈஸ்வரி பூமியின் சுழற்சி, அட்சத் தீர்க்கக் கோடுகள், சூரிய உதயம் ஆகி யவற்றை விளக்கிப் பேசினார்.

கொடிக்கம்பம், தண்ணீர் பாட் டில் ஆகியவற்றை வெயில் படும் இடத்தில் வைத்து நிழல் சிறிது சிறிதாக மறைவதை செய்து காட்டினர். நண்பகல் 12.19 மணி அளவில் மதுரையில் இந்த நிழல் இல்லாத நாள் அறிவியல் நிகழ்வு நடந்தது. சந்திரலேகா நகர் குழந்தைகள், பெற்றோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியை உமா, ராமலட்சுமி செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x