சிறுதொழில் வங்கியின் சார்பில் தமிழக தொழில்களை மேம்படுத்த ரூ.524 கோடி நிதி: முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்புதல் கடிதம் வழங்கல்

சிறுதொழில்களுக்கான அடிப்படை மேம்பாட்டு திட்டத்துக்கான ரூ.524 கோடி கடனுதவிக்கு கொள்கை அளவிலான ஒப்புதல் கடிதத்தை முதல்வர் ஸ்டாலினிடம், சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சிவசுப்பிரமணியன் ராமன் நேற்று வழங்கினார். உடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன், தொழில்துறை செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கியின் சார்பில், தமிழக சிறு,குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்த ரூ.524 கோடிக்கான ஒப்புதல் கடிதத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வங்கியின் தலைவர் சிவசுப்பிரமணியன் ராமன் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வர் மு.க.ஸ்டாலினை, மத்திய அரசின் நிதித்துறையின் கீழ்இயங்கும் சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (சிட்பி) தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சிவசுப்பிரமணியன் ராமன் நேற்று சந்தித்தார். அப்போது, சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் தொகுப்பு (கிளஸ்டர்) மேம்பாட்டு நிதி என்ற திட்டத்தின்கீழ், தமிழகத்தில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் பகுதிகளை மேம்படுத்த ரூ.524 கோடி நிதியுதவிக்கான கொள்கை அளவிலான ஒப்பந்தக் கடிதத்தை வழங் கினார்.

அப்போது, முதல்கட்டமாக இந்த நிதி வழங்கப்படுவதாகவும், திட்டங்களை நிறைவேற்றியதும் கூடுதல் நிதி வழங்கப்படும் என்றும் ‘சிட்பி’யின் தலைவர் தெரிவித்தார். நாட்டிலேயே இந்த நிதியை பயன்படுத்தும் மாநிலம் தமிழகம் என்பதுகுறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரத்தில் பிரிசிசன் இன்ஜினீயரிங் தொகுப்பு, கோவையில் மின் - வாகன காம்போனன்ட்ஸ் தொகுப்பு, ஓசூரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க தினசரி 20 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திட்டம், ஒரகடத்தில் மருத்துவ உபகரணங்கள் தொழில் பூங்கா, பெருந்துறை, அம்பத்தூர்,கோவை மற்றும் தூத்துக்குடியில் தொழிலாளர்களுக்கான வீட்டுவசதி உள்ளிட்ட திட்டங்கள் இந்த நிதியின் மூலம் செயல்படுத்தப்படும்.

இந்நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரகதொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நிதித் துறை அமைச்சர்பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன், தொழில்துறை செயலர் நா.முருகானந்தம், சிறு, குறு தொழில்கள் துறைசெயலர் வி.அருண்ராய் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in