தமிழகம்
புத்தகப் பைகளில் ஜெயலலிதா, பழனிசாமி படம்: முதல்வரின் பெருந்தன்மை.. அமைச்சர் பெருமிதம்
65 லட்சம் புத்தகப் பைகளில் முன்னாள் முதல்வர்களின் படங்கள்இருக்கட்டும் என்று பெருந்தன்மையுடன் கூறியவர் நம் முதல்வர் ஸ்டாலின் என்று பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று கூறியதாவது:
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 65 லட்சம் புத்தகப்பைகளில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமியின்புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததை கட்சியினர் சுட்டிக்காட்டினர். அதுதொடர்பாக முதல்வரிடம் கூறியபோது, அதை சரிசெய்ய எவ்வளவு செலவாகும் என்று கேட்டார். ரூ.13 கோடி வரை செலவாகும் என்றேன். அதற்கு அவர்,‘‘அந்த படங்கள் இருக்கட்டும்.அத்தொகையை அரசுப் பள்ளிமாணவருக்கு செலவிடுங்கள்’’ எனபெருந்தன்மையுடன் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
