

நாகை மாவட்டம் வேளாங்கண்ணிபுனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் அதிபர் பிரபாகர் அடிகளார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா ஆக.29 மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, அன்று மாலை 4.30 மணிக்கு பேராலய வளாகத்தில் புனித கொடி பவனி நடைபெறும். மாலை 5 மணிக்கு தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனித கொடியேற்றுகிறார்.
முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி செப்.7-ல் பேராலய வளாகத்தில் நடைபெறும். செப்.8-ல் ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் விழா சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். பின்னர், கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டவுடன், புனிதக்கொடி இறக்கப்பட்டு பெருவிழா நிகழ்ச்சி நிறைவுபெறும்.
கரோனா ஊரடங்கு காரணமாகபெருவிழா நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை. விழாவை பேராலயத்தின் இணையதளத்தில் காணலாம் என்றார்.