

மயிலாடுதுறையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிடுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "மயிலாடுதுறை மாவட்டம் திட்டை ஊராட்சி குளக்கரை என்ற இடத்தில் 25-8-2021 அன்று காலை 6-45 மணியளவில் கனரக வாகனம் சென்றதால் வீட்டு சர்வீஸ் மின் இணைப்பிலிருந்து அறுந்து தொங்கிய மின்சார ஒயர் பட்டுத் தில்லைவிடங்கன் கிராமம், கன்னிக்கோயில் தெருவில் வசிக்கும் சிங்காரவேலு, த/பெ.சின்னத்தம்பி என்பவரும் திட்டை கிராமம், குளக்கரை தெருவில் வசிக்கும் அரவிந்த், த/பெ. லூர்துசாமி என்பவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்குத் தலா ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.