டெல்லி பல்கலை; தமிழ் எழுத்தாளர்கள் உட்பட மூவரின் படைப்புகள் நீக்கப்பட்டதால் சர்ச்சை

எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணி
எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணி
Updated on
1 min read

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து 3 எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் பி.ஏ. ஹானர்ஸ் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இருந்து, பாடத்திட்ட மேற்பார்வைக் குழு சிலரின் படைப்புகளை மட்டும் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி நீக்கம் செய்தது. குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் எழுத்தாளர்களான பாமா, சுகிர்த ராணி ஆகியோரின் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் பாமா எழுதிய ’சங்கதி’, கவிஞர் சுகிர்த ராணியின் ’கைம்மாறு’, ’என்னுடல்’ ஆகிய மொழியாக்கப் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

அதேபோல புகழ்பெற்ற வங்க எழுத்தாளரான மகாஸ்வேதா தேவியின் ’திரவுபதி’ என்னும் சிறுகதையும் நீக்கப்பட்டுள்ளது. 3 எழுத்தாளர்களின் படைப்புகளும். பல்கலைக்கழக மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பேரில் நீக்கப்பட்டுள்ளன.

அதேபோல பல்கலைக்கழகத்தில் 2022- 23 ஆம் கல்வியாண்டில் இருந்து புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் எதிர்ப்பையும் மீறி, 3 எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in