Published : 26 Aug 2021 03:13 AM
Last Updated : 26 Aug 2021 03:13 AM

திருச்சி - காரைக்கால், மதுரை - செங்கோட்டை உள்ளிட்ட முன்பதிவு இல்லாத 5 ரயில்கள் ஆக.30 முதல் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை

திருச்சி - காரைக்கால், மதுரை - செங்கோட்டை உள்ளிட்ட முன்பதிவு இல்லாத 5 ரயில்கள், வரும் 30-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வேயில் வரும் 30-ம் தேதி முதல் 5 முன்பதிவு இல்லாத குறுகிய தூர ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

திருச்சியில் இருந்து, வரும் 30-ம்தேதி முதல் காலை 6.25 மணிக்குபுறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06490) அதேநாளில் காலை 10.45 மணிக்கு காரைக்கால் செல்லும். மறுமார்க்கமாக காரைக்காலில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06739) அதேநாளில் இரவு 7.15 மணிக்கு திருச்சிக்கு செல்லும்.

மயிலாடுதுறையில் இருந்து தினமும் (ஞாயிறு தவிர) காலை 6.45மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06541) அதேநாள்காலை 7.45 மணிக்கு திருவாரூர் செல்லும். மறுமார்க்கமாக திருவாரூரில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் (06542) அதேநாளில் இரவு 9.15 மணிக்கு மயிலாடுதுரை செல்லும்.

மதுரையில் இருந்து, வரும் 30-ம்தேதி முதல் காலை 7.10 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத ரயில் (06504) அதேநாள் காலை10.35 மணிக்கு செங்கோட்டை செல்லும். செங்கோட்டையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06503) அதேநாளில் இரவு 7.10 மணிக்கு மதுரை செல்லும்.

இதேபோல், எர்ணாகுளம் - கொல்லம் (06443 / 06444), கன்னூர்- மங்களூரு (06477 / 06478) இடையேயான முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களும் வரும் 30-ம் தேதிமுதல் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x