Published : 26 Aug 2021 03:14 AM
Last Updated : 26 Aug 2021 03:14 AM

ரூ.100 கோடியில் சேமிப்பு கிடங்கு, நவீன அரிசி ஆலை

சென்னை

தானியங்கி வசதியுடன் கூடிய மிகப் பெரிய சேமிப்புக் கிடங்கு (சைலோ) மற்றும் நவீன வசதி அரிசி ஆலை ஆகியவை நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.100 கோடியில் அமைக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் உணவுத் துறை மீதான மானியக்கோரிக்கையின்போது, உறுப்பினர்களின் விவாதங்களுக்குப் பதில் அளித்து அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:

சென்னை வடக்கு சரகத்தில் உள்ள வில்லிவாக்கம், ஆவடி, திருவொற்றியூர் மண்டலங்களில் உள்ள பகுதிகளை சேர்த்து, கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மண்டல அலுவலகம் ரூ.1 கோடியில் உருவாக் கப்படும்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்து, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு, ரூ.20 லட்சத்தில் அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டுவரும் குடிமக்கள்-நுகர்வோர் மன்றங்கள் வாயிலாக, தேசிய நுகர்வோர் நாள் மற்றும் உலக நுகர்வோர் உரிமை நாள் அனுசரிக்கப்படும். மேலும், ரூ.50 லட்சம் மதிப்பில் நுகர்வோர் விழிப்புணர்வுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையில் உள்ள இரண்டு மண்டலங்கள், நான்கு மண்டலங்களாக அதிகரிக்கப்படும். திருச்சி மற்றும்கோவையை தலைமையிடமாகக் கொண்டு, காவல் கண்காணிப் பாளர்கள் தலைமையில் புதிய மண்டலங்கள் தோற்றுவிக்கப்படும்.

புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் அலகுகள் ஏற்படுத் தப்படும்.

தலா ரூ.2 கோடியில் ஐந்து திறந்தவெளி நெல் சேமிப்பு மையங்கள், ரூ.50 கோடியில் 140 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதியின்கீழ் ரூ.17 கோடியில் 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.

நவீன அரிசி ஆலைகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு, பரா மரிப்புப் பணிகள் ரூ.25 கோடியில் மேற்கொள்ளப்படும். தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும் தேனி மாவட்டங்களில் தனியார் பங்களிப்புடன் நவீன அரிசி ஆலைகள் நிறுவப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் கட்டுமானம் மற்றும் பொறியியல் பிரிவுகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப் பப்படும். 50 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தலா ரூ. 20 லட்சத்தில் நவீனமயமாக்கப்படும்.

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை இயற்கை சேதங் களிலிருந்து பாதுகாக்கும் வகையில், திறந்தவெளி நெல் சேமிப்பு மையங்களுக்கு ரூ. 2.50 கோடியில் மேற்கூரை அமைக்கப்படும்.

தானியங்கி வசதியுடன் கூடிய மிகப் பெரிய சேமிப்புக் கிடங்கு (சைலோ) மற்றும் நவீன வசதி அரிசி ஆலை, நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.100 கோடியில் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் காலியாக உள்ள 91 பணியிடங்கள் நிரப்பப்படும்.

இவ்வாறு அமைச்சர் சக்கர பாணி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x