இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிப்போருக்கு வில்லங்க சான்று, ஆவண நகல் உடனடியாக வழங்க அறிவுறுத்தல்

இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிப்போருக்கு வில்லங்க சான்று, ஆவண நகல் உடனடியாக வழங்க அறிவுறுத்தல்
Updated on
1 min read

இ-சேவை மையங்களில் வில்லங்கசான்று, ஆவண நகல் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக ஆவணங்களை அனுப்பி வைக்கவேண்டும் என்று சார் பதிவாளர்களுக்கு பதிவுத் துறை தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

பதிவுத் துறையில், பத்திரங்களைப் பதிவு செய்வதற்கான நடைமுறைகளை கணினி வழியில் முடித்து, டோக்கன் பெற்று, குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், விரைவாகப் பதிவு செய்து உடனடியாக பத்திரத்தைப் பெறும் திட்டம் அமலில் உள்ளது.

மேலும், வில்லங்க சான்று மற்றும் சான்றொப்பமிடப்பட்ட பத்திர நகலையும் ஆன்லைனில் விண்ணப்பித்தும், சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் நேரடியாகச் சென்று விண்ணப்பித்தும் பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில், கடந்த ஆக.19-ம் தேதி முதல் இ-சேவை மையங்கள் மூலம் வில்லங்க சான்று மற்றும்சான்றொப்பமிடப்பட்ட பத்திரநகல் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, வில்லங்க சான்று அளிப்பதற்கான நடைமுறைகள் குறித்து சார்பதிவாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை பதிவுத்துறை தலைவர் சமீபத்தில் வழங்கியுள்ளார்.

அதில், பொதுமக்கள் இ-சேவைமையங்கள் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை வழிமுறைகள்படி மின்னொப்பம் இட்டு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று பதிவுத்துறை தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in