விளையாட்டுத் திடல்கள் மேம்படுத்தப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

விளையாட்டுத் திடல்கள் மேம்படுத்தப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

Published on

சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் புதிய அரங்கம், திறந்தவெளி பார்வையாளர் மாடம், வேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.1.05 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புனரமைக்கப்பட்ட விளையாட்டுத் திடலை, தயாநிதி மாறன் எம்.பி. தலைமையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்துவைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "சென்னையில் உள்ள 400-க்கும் மேற்பட்ட விளையாட்டுத் திடல்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தினமும் 1,500 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும். இதையொட்டி அனைத்து ஏரிகளும் சீரமைக்கப்படும். ஏரியில் குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் நா.எழிலன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர்கள் எம்.எஸ்.பிரசாந்த், ஷரண்யா அரி, தலைமைப் பொறியாளர் எஸ்.காளிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in