Published : 26 Aug 2021 03:14 AM
Last Updated : 26 Aug 2021 03:14 AM

அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி வடிவம் தரப்பட்டது- புதுவையில் இன்று பட்ஜெட் தாக்கலாகிறது

புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்தஅமைச்சரவைக்கூட்டத்தில் பட்ஜெட்டு்க்கு இறுதிவடிவம் தரப்பட்டது. இன்று பட்ஜெட் தாக்கல் ஆகிறது.

புதுவை சட்டப்பேரவையில் வழக்கமாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், கடந்த மார்ச் மாதத்துக்கு முன்பாக காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இதனால் புதுவைக்கான 5 மாத இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

இந்நிலையில், புதுவை பட்ஜெட் டுக்கு மத்திய அரசு ஒப்புதல் கிடைத் துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரை யொட்டி நேற்று முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. பதவியேற்புக்குப் பின் நடைபெறும் முதல் கூட்டம் இது.

கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணக்குமார், தலைமை செயலர் அஸ்வனிகுமார், அரசு செயலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை கூடுகிறது. கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று ஆளுநர் தமிழிசை உரையாற்ற, காலை 9.25 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து சட்டப்பேரவை வளாகத்துக்கு வருகிறார். அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. பேரவைத் தலைவர் செல்வம், சட்டப்பேரவைச் செயலர் முனிசாமி ஆகியோர் ஆளுநரை வரவேற்று அழைத்து செல்கின்றனர்.

பேரவைத் தலைவர் இருக்கையில்ஆளுநர் தமிழிசை அமர்ந்து கூட்டத்தொடரை தொடங்கி வைத்து முதன்முறையாக புதுவை சட்டப்பேரவையில் தமிழில் உரையாற்றுகிறார். ஆளுநர்உரை முடிந்தபின் உறுப்பினர்களிடம் இருந்து விடைபெற்றுச் செல்கிறார்.

இதைத்தொடர்ந்து பேரவைத்துணைத்தலைவர் தேர்தலில் ராஜவேலு தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பை பேரவைத் தலைவர் செல்வம் அறிவிக்கிறார். தொடர்ந்து பேரவை துணைத் தலைவரை இருக்கையில் அமர வைக்கின்றனர்.

தொடர்ந்து சபை ஒத்தி வைக்கப்படுகிறது. நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி மாலை 4.30க்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதைத்தொடர்ந்து பேரவைக்கூட்டத் தொடர் எவ்வளவு நாட்கள் நடக்கும் என்பது அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு எடுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x