தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகர்: விஜயகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

விஜயகாந்த் - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: கோப்புப் படம்.
விஜயகாந்த் - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: கோப்புப் படம்.
Updated on
1 min read

விஜயகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (ஆக. 25) தனது 69-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு, விஜயகாந்துக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, கரோனா தொற்று காரணமாக, தொண்டர்கள் யாரும் பிறந்த நாளன்று நேரில் வர வேண்டாம் எனவும், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டாட வேண்டும் எனவும், விஜயகாந்த் அறிக்கை வாயிலாகக் கேட்டுக் கொண்டார். விரைவில் உடல்நலப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தன் ட்விட்டர் பக்கத்தில், "தேமுதிக தலைவரும், தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் 'கேப்டன்' விஜயகாந்த் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்த நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in