

தேனி மாவட்டம் சின்னமனூரில் விநாயகர் சதுர்த்திக்காக களிமண் சிலை பல்வேறு வடிவங்களில் தயாராகி வருகிறது. இவற்றை வீடியோ அழைப்பில் பார்த்து தேர்வு செய்ததும், வீட்டுக்கே நேரடியாக வந்து ஒப்படைக்கின்றனர்.
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரு கிறது. இந்த ஆண்டுக்கான விழா செப்.10-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகளை வழிபட்டு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.இதற்காக தேனி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. சின்னமனூர் முத்தாலம்மன் கோயில் அருகே இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 3 அங்குலம் முதல் 3 அடி வரை தற்போது பல்வேறு உருவங்களில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. நந்தி, மயில், சிங்கம் மேல் அமர்ந்த விநாயகர், பார்வதி, சிவன் முகங்களை பக்கவாட்டில் கொண்ட விநாயகர், காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு விநாயகர், ஆஞ்சநேயர் விநாயகர் என்று வித்தியாசமான உருவங்களுடன் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளதால் சிலை வாங்க பொது இடங்களில் அலைவதைத் தடுக்க ஆன்லைன் மூலம் டோர் டெலிவரி திட்டம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதற்காக 9788942141 என்ற எண்ணில் தொடர்புகொண்டு வீடியோ அழைப்பில் சிலைகளை பார்க்கலாம். பிடித்த சிலைகளை தேர்வு செய்து கொள்ளலாம். பின்பு டோர் டெலிவரி மூலம் இவை ஒப்படைக்கப்படும்.
இது குறித்து சிலை வடிவமைப் பாளர்கள் கண்ணன், குமார் ஆகியோர் கூறுகையில், பல தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோம். விநாயகர் சதுர்த்திக்காக வித்தியாசமான சிலைகளை வடிவமைத்துள்ளோம். இந்த ஆண்டு புதிய முயற்சியாக ஆன்லைன் மூலம் பார்த்து வாங்க ஏற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே சிலைகளை வாங்கலாம். சிலை களை நேரடியாக ஒப்படைக்க குறைந்தபட்சம் ரூ.20 சேவைக் கட்டணம் பெறுகிறோம். தூரத் துக்கு ஏற்ப இத்தொகை மாறுபடும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வாறு களிமண், நெல், தேங்காய் நார் போன்றவற்றினால் சிலைகள் உருவாக்கப்படுகின்றன என்றனர். கலைநயம் மிக்க சிலைகளை வீட்டில் இருந்தபடியே கொள்முதல் செய்யும் விற்பனை யுக்தி பல ரிடையேயும் வரவேற்பைப் பெற் றுள்ளது.