Published : 25 Aug 2021 03:17 AM
Last Updated : 25 Aug 2021 03:17 AM

இணைய வழியில் சந்தித்து மகிழ்ந்த டிவிஎஸ் மெட்ரிக் பள்ளி முன்னாள் மாணவர்கள்

மதுரை பழங்காநத்தம் டிவிஸ் நகர் பகுதியிலுள்ள ‘ரீ-லிவ் '96’ - தி டி.வி.எஸ் பள்ளியின் ( டிவிஎஸ் இலக்குமி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி) வெள்ளி விழா ஆண்டு நிறைவையொட்டி 1996-ல் படித்த முன்னாள் மாணவர்கள் இணையவழியில் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.

பேரிடர் காரணமாக நேரில் சந்திக்க முடியாத நிலையில், ஜூம் மூலம் நடத்திய இந்த சிறப்பு சந்திப்பு நிகழ்வில் சுமார் 70-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவியர் பல்வேறு ஊர்களில் அவரவர் இடங்களில் இருந்தே பங்கேற்றனர்.

அப்போது பள்ளிக்காலத்தில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.

கற்பித்த ஆசிரியர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தி களையும் காணொலியில் பகிர்ந்து கொண்டனர். விரைவில் நேரில் சந்திக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாண வர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x