சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (ஆக.24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக கடற்கரையை ஒட்டிநிலவும் வளிமண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக 24-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

மேலும் 25, 26-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங் களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக் கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in