மகாமகக் குளக்கரையில் சீனிவாச மகோற்சவம்

மகாமகக் குளக்கரையில் சீனிவாச மகோற்சவம்
Updated on
1 min read

திவ்ய தேசங்கள் நிறைந்த கும்பகோணத்தில் ஒவ்வொரு மகாமகத்தின்போதும் மகாமக குளக்கரையில் சீனிவாச மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டு மகாமகத் தையொட்டி மகாமகக் குளத்தின் தென்கரையில் சீனிவாச மகோற்சவ அலங்கார மண்டபத்தில் கடந்த 18-ம் தேதி அலர்மேல்மங்கா சமேத சீனிவாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதையடுத்து, நேற்று முன்தினம் விஷ்ணு சகஸ்ரநாம பூஜையும், நேற்று சண்டிஹோமமும் நடைபெற் றன. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர் மகாமகக் குளத்தில் ஊற்றப்பட்டது.

தொடர்ந்து, இன்று (பிப்ரவரி 21) சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமமும், நாளை (பிப்ரவரி 22) அலங்கார மண் டபத்தில் சிறப்பு பூஜையும் நடைபெறவுள்ளது.

இந்த மகோற்சவ விழாவின் போது தினமும் காலை 5 மணி முதல் 9 மணி வரை அலங்கார சக்கரவர்த்தி ஏ.ஆர்.மோகன்ராம் சுவாமிகளின் திருவாராதனமும், அதைத் தொடர்ந்து பகல் 12 மணி வரை பாஸ்கரராயபுரம்  வித்யா மோகன் குருஜியால் ஹோமமும் நடத்தப்படுகிறது.

மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை, மகாமகக் குளத்தை நிர்மாணித்த கோவிந்த தீட்சிதர் வம்சத்தின் 9-ம் தலைமுறையைச் சேர்ந்த சுவாமிநாத தீட்சிதரின் சதுர் வேதபாராயணம் நடைபெறுகிறது. மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நாமசங்கீர்த்தனம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சீனிவாச வைபவ மகோற்சவ அறக்கட்டளை, அரண்மனை ரெங்கசாமி டிரஸ்ட் ஆகியோர் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in