ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை

ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை
Updated on
1 min read

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, 6-வது ஊதியக்குழு முரண்பாடுகளை நீக்குவது, மத் திய அரசு ஆசிரியர்களுக்கு இணை யான ஊதியம், தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக கருது வது உள்ளிட்ட 15 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி ஆசிரியர் அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன.

இந்த கோரிக்கையை வலியு றுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக் கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில் ஜனவரி 30, 31, பிப்ரவரி 1 ஆகிய 3 நாட் கள் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தொடர் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆசிரியர்களின் கோரிக்கை களை நிறைவேற்றுவது தொடர்பாக முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் சென்னையில் ஒரு லட்சம் ஆசிரியர்களை திரட்டி கோட்டையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாகவும், அதைத் தொடர்ந்து, தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வும் ஜாக்டோ அறிவித்திருந்தது.

இந்த நிலையில், பல்வேறு ஆசி ரியர் அமைப்புகளைச் சேர்ந்த நிர் வாகிகளை தமிழக அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது. சென்னை கோட்டையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில், ஓ.பன்னீர் செல்வம், நத்தம் ஆர்.விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன், நிதித்துறை முதன்மைச் செயலர் கே.சண்முகம், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் டி.சபீதா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள ஜாக்டோ நிர்வாகிகளுக்கு அழைப்பு வந்துள்ளதாக அதன் மாநில தொடர்பாளர் பெ.இளங்கோவன் தெரிவித்தார். அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவது தொடர்பாக ஜாக்டோ நிர்வாகிகளின் ஆலோ சனைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in