

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரூ.3 கோடியில் ஏரிகளில் உள்ள 30 மதகுகள், 2 கலங்கள் போன்றவற்றை சீரமைக்கும் பணிதீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகளில் சேதமடைந்த மதகுகள், கலங்கள் போன்றவற்றை சீரமைக்கும் பணி, நீர்வள ஆதாரத் துறையினர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.
கடந்த மழையின்போது சேதமடைந்த 30 மதகுகள் மற்றும் 2 கலங்கள் ஆகியவற்றை ரூ.3 கோடி செலவில் சீரமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பருவ மழைக்குள் இப்பணிகளை முடிக்கும் வகையில், நீர்வள ஆதாரத் துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏரி மதகுகளை சீரமைக்கும் பணி தொடங்கியதால்,விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, "கடந்த பருவ மழையின்போது நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஏரிகளில் மதகு மற்றும் கலங்கள் சேதமடைந்தன அவற்றைக் கணக்கெடுத்து இந்த ஆண்டு வருடாந்திரப் பராமரிப்பு பணியின் கீழ் ரூ.3 கோடியில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மதகுகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பருவமழைக்குள் இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.