

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 160-க்கு விற்பனையானது.
சர்வதேச அளவில் தங்கம் விலை மாற்றம், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகிய காரணங்களால் உள்ளூரில் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது. நேற்றும் விலை உயர்வு காணப்பட்டது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 160-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 770-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 728-க்கு விற்கப்பட்டது. கடந்த 12-ம் தேதிக்கு பிறகு தங்கம் ஒரு பவுன் விலை மீண்டும் ரூ.22 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கடந்த சில வாரங்களாக சென்னையில் தியாகராயநகர், மயிலாப்பூர், புரசைவாக்கம், தாம்பரம், பிராட்வே உள்ளிட்ட இடங்களில் இருக்கும் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட கணிசமாக குறைந்திருந்தது.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘’சர்வதேச அளவில் தங்கத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதால், நேற்றும் விலை உயர்வு இருந்தது. அடுத்த சில நாட்களுக்கு தங்கம் தொடர்ந்து விலை உயர வாய்ப்புள்ளது’’.