புதுச்சேரிக்குப் புதிய மாநில நிர்வாகிகள்: திமுக அறிவிப்பு

புதுச்சேரிக்குப் புதிய மாநில நிர்வாகிகள்: திமுக அறிவிப்பு
Updated on
1 min read

புதுச்சேரிக்குப் புதிய மாநில நிர்வாகிகளை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்துத் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''புதுச்சேரி மாநிலத்தை வடக்கு, தெற்கு என அறிவித்து செயல்பட்டு வந்த நிலையில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதாலும், கட்சிப் பணிகள் அனைத்துத் தொகுதிகளிலும் செம்மையுற நடைபெற வேண்டி உள்ளதாலும், வடக்கு, தெற்கு என்பதை தலைமைக் கழக முடிவிற்கு ஏற்ப ஒன்றாக இணைத்து, புதுச்சேரி மாநிலமாக அறிவிக்கப்படுகிறது.

புதுச்சேரி மாநில நிர்வாகிகள் பின்வருமாறு:-

அவைத் தலைவர் - எஸ்.பி.சிவக்குமார்
அமைப்பாளர் - இரா. சிவா எம்.எல்.ஏ.,
பொருளாளர் - கே.எம்.பி.லோகையன்
துணை அமைப்பாளர்கள் - வி. அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ.,
எ. குமார் (எ) கிருஷ்ணன்
எஸ்.எஸ். செந்தில்குமார்
சன். குமாரவேல்
என். கலியபெருமாள்
ம. குணா (எ) திலீபன்
சுந்தரி அல்லிமுத்து
எஸ். அமுதாகுமார்

ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைச் செயற்குழு, பொதுக்குழு, தொகுதிக் கழகச் செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் இவர்களுடன் இணைந்து செயலாற்றுவார்கள்''.

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in