

மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. துறைகள் வாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்குகிறது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட்கூட்டத் தொடர், கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அன்று பேரவையில் இந்த நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 14-ம் தேதி, முதல்முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, ஆக.16 முதல் 19-ம் தேதி வரை2 பட்ஜெட்கள் மீதான விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் 19-ம்தேதி உரையாற்றினர்.
இன்று நீர்வளத்துறை
முகரம் பண்டிகை, சனி, ஞாயிறுஎன 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு பேரவை இன்று மீண்டும்கூடுகிறது. அலுவல் ஆய்வுக்குழுவில் எடுத்த முடிவின்படி, இன்று முதல் துறைகள் வாரியான மானியகோரிக்கைகள் மீது விவாதம் தொடங்குகிறது.
முதல் நாளான இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. விவாதத்தின் இறுதியில் துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரை அளிப்பார்.
ஏற்கெனவே செப்.21-ம் தேதிவரை நடைபெற இருந்த கூட்டத் தொடரை, ஒரு வாரம் குறைத்து செப்.13-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.