உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆகஸ்ட் 26-ம் தேதி- மநீம நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆகஸ்ட் 26-ம் தேதி- மநீம நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை
Updated on
1 min read

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மையம் கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் சென்னையில் வரும் 26-ம் தேதி கமல்ஹாசன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையமும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக சென்னையில் வரும் 26-ம் தேதி அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும்என்பதில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உறுதியாக உள்ளார். இதற்காகவரும் 26-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மண்டல செயலாளர்கள்(கட்டமைப்பு) மற்றும் மாநில செயலாளர்கள்(அணிகள்) ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளார். இக்கூட்டத்தில், கட்சி கட்டமைப்பு ரீதியாக தற்போதுள்ள நிலை, தற்போதைய சூழலில் உள்ளாட்சி தேர்தலில் எதிர்கொள்வதால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்கள், வெற்றிகரமாக எதிர்கொள்ள கட்டமைப்பு ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in