

தொழில்நுட்பக் கல்வி ஆணையர் திங்கள்கிழமை வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: தொழில்நுட்பக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் இயங் கும் அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2014-15ம் கல்வியாண்டில் நேரடி யாக 2-ம் ஆண்டில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூன் 19-ம் தேதி முதல் ஜூலை 2 வரை காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் பொறி யியல் கல்லூரியில் நடைபெறும்.
ஜூன் 19: பி.எஸ்சி பிரிவு, விளையாட்டு மற்றும் முன்னாள் ராணுவத்தினர் (தேர்ந்தெடுக் கப்பட்ட மாணவர்கள்), பல தரப்பட்ட மாற்றுத் திறனாளிகள் (தேர்ந்தெ டுக்கப்பட்ட மாணவர்கள்).
ஜூன் 20: கெமிக்கல், டெக்ஸ் டைல், தோல், பிரின்டிங்.
ஜூன் 20-ம் தேதி பிற்பகல் முதல் ஜூன் 22 வரை: சிவில்
ஜூன் 23 முதல் ஜூன் 27-ம் தேதி முற்பகல் வரை: மெக்கானிக்கல்
ஜூன் 27-ம் தேதி பிற்பகல் முதல் ஜூலை 2-ம் தேதி வரை: எலக்ட்ரிக்கல்.
மேலும் விவரங்களை www.accet.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கலந்தாய்வுக் கான அழைப்புக் கடிதம் மாணவர் களுக்கு தபாலில் அனுப்பப் பட்டுள்ளது.
கடிதம் கிடைக்கப் பெறாத தகுதியுள்ள மாணவர்களும் மேற் கூறிய தேதிகளில் அசல் சான்றிதழ் களுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.