

கும்பக்கோணத்தில் நடைபெறும் மகாமகம் திருவிழாவை முன் னிட்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு வரும் 22-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா மகம் திருவிழா நடப்பது வழக் கம். தென்னிந்தியாவின் கும்ப மேளா என்று அழைக்கப்படும் கும்பக்கோணம் மகாமகம் திரு விழாவில் பங்கேற்க நாடு முழு வதும் இருந்து பல லட்சக் கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தஞ்சாவூர் மற்றும் அரு கில் உள்ள மாவட்டங்களான திருவாரூர், நாகை மாவட்டங் களுக்கு வரும் 22-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாற்றுமுறை ஆவணச் சட் டத்தின்படி இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள் ளது.
அதன்படி இந்த 3 மாவட்டங் களில் உள்ள அனைத்து வங்கிகள், தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.