என்சிசி மாணவர்களுக்கு ராணுவ பணியில் சேர வாய்ப்பு அதிகம்: கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

என்சிசி மாணவர்களுக்கு ராணுவ பணியில் சேர வாய்ப்பு அதிகம்: கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தகவல்
Updated on
1 min read

ராணுவப் பணியில் சேர என்சிசி மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் என்று தமிழக கடலோர பாதுகாப்பு படை கூடுதல் டிஜிபி சி.சைலேந்திரபாபு கூறினார்.

தமிழ்நாடு தேசிய மாணவர் படை (என்சிசி) சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மாநில அளவிலான 3 நாள் என்சிசி பயிற்சி முகாம் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கலந்துகொள்ளும் இந்த என்சிசி முகாமை தமிழக கடலோர பாதுகாப்பு படை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

நான் கல்லூரியில் படிக்கின்ற போது என்சிசி-யில் இருந்தேன். காவல்துறையில் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு என்சிசிதான் அடிப்படை காரணம். என்சிசி-யில் ஒழுக்கமும் தலைமைப் பண்பும் கற்றுக்கொடுக்கப்படும். இந்த பண்புகள் இருந்தால் அனைவராலும் சாதிக்க முடியும்.

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு துறையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. என்சிசி மாணவர்கள் ராணுவத் துறையில் எளிதில் சேரலாம். ராணுவ அதிகாரி பணியிடங் களுக்கு மற்ற பட்டதாரிகளுக்கு எழுத்துத்தேர்வு, உடல்திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகி யவை நடத்தப்படும். ஆனால், என்சிசி-யில் இருந்தால் எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடியாக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். எனவே, என்சிசி மாணவர்களுக்கு ராணுவ வேலை வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும்.

இவ்வாறு சைலேந்திரபாபு கூறினார்.

முகாம் தொடக்க விழாவில் சட்டப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் பி.வணங்கா முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 26 கல்லூரிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள். அவர் களுக்கு ஓட்டம், தடை ஓட்டம், அணிவகுப்பு, உடற்பயிற்சி, கலைநிகழ்ச்சி என பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்.

அதில் சிறந்த மாணவர் கள் டெல்லியில் நடக்கும் சுதந்திர தினவிழா அணி வகுப்பில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்படுவர் என்று சட்டப் பல்கலைக்கழகத்தின் என்சிசி அதிகாரி லெப்டினென்ட் டி.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in