

விருதுநகரில் உள்ள நகராட்சி சிறுவர் பூங்காவில் போதிய மின் விளக்குகள் இல்லை. உரிய பராமரிப்பின்றி முட்புதர் வளர்ந் துள்ளதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நடைப்பயிற்சி செய்ய அச்சப்படுகின்றனர்.
விருதுநகரில் நகராட்சி சார்பில் 1999-2000-ம் ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் பல லட்ச ரூபாய் செலவில் பொது மக்களின் பங்களிப்போடு சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டரங்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
பணிகள் முடிக்கப்பட்டு 19.4.2000 அன்று சிறுவர் பூங்கா திறக்கப்பட்டது. கல்லூரி சாலையில்அமைந்துள்ள இப்பூங்கா வில், பல்வேறு விளையாட்டு சாதனங்கள் பொருத்தப்பட்டன. சிறுவர்கள் மட்டுமின்றி, அவர்களுடன் வரும் பெற்றோரும், பெரியவர்களும் அமர்ந்து ஓய்வு எடுக்க சிமெண்ட் இருக்கைகள் அமைக்கப்பட்டன.
பூங்காவின் உட்பகுதியில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டன. நாளடைவில் இப்பூங்கா பராமரிக்காமல் கைவிடப்பட்டு சமூக விரோதிகளின் கூடாரமானது. 2014-ல் நகராட்சி நூற்றாண்டு நிதியாக பெறப்பட்ட ரூ.25 கோடியில் சிறுவர் பூங்காவுக் காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் எதும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நகராட்சி சிறுவர் பூங்கா திறக்கப்பட்டது. மாலையில் பூங்காவில் மின்விளக்குகள் இல்லை. இதனால் குழந்தைகளை அழைத்துவர பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
அதோடு, பூங்காவில் அமைக் கப்பட்ட செயற்கை நீரூற்றுகள் செயல்பாடற்று கிடக்கின்றன. ஆங்காங்கே கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டு அகற்றப்படாமல் உள்ளதால் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
எனவே, நகராட்சி சிறுவர் பூங்காவில் கூடுதல் மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்துவதோடு, புதர்களை அகற்றி, செயற்கை நீரூற்றுகளை இயங்கச் செய்து அச்சமின்றி நடைப்பயிற்சி மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.