கோப்புப் படம்
கோப்புப் படம்

சந்தைப்படுத்துதலை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றால் வாழை விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்: தேசிய வாழை ஆராய்ச்சி மைய நிறுவன நாள் விழாவில் மத்திய வேளாண் ஆணையர் கருத்து

Published on

சந்தைப்படுத்துதலை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றால் வாழை விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என தேசிய வாழை ஆராய்ச்சி மைய நிறுவன நாள் விழாவில் மத்திய வேளாண் ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் 28-வது நிறு வன நாள் விழா இணைய வழியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இயக்குநர் எஸ்.உமா தலைமை வகித்தார். இதில், டெல்லியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் துணை இயக்குநர் எ.கே.சிங் பேசும்போது, “வாழை விவசாயத்தை லாபகரமான தொழி லாக மாற்ற ‘மதிப்பு சங்கிலி’ எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட சந்தை வழிப்படுத்தும் முறைகளால் தான் முடியும். இப்போதுள்ள சந் தைப்படுத்தும் முறைகளிலிருந்து, சிறந்த முறையை நோக்கி செல் லும்போது தான் அதிக வருமா னத்தைப் பெற முடியும்” என்றார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அரசின் வேளாண் ஆணையர் மல்ஹோத்ரா பேசியது: வாழை உற்பத்தியில் ஓரளவு தன்னிறைவு அடைந்திருக்கும் வேளையில், வாழை விவசாயி களின் வருமானத்தை இரட்டிப் பாக்க வேண்டுமெனில் வாழை சந்தைப்படுத்துதலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். திசு வளர்ப்பு மூலம் சீரான வளர்ச்சி உடைய வாழையை உருவாக்கினால், ஏற்றுமதியில் நல்ல விலை கிடைக்கும். தரமான விதை கன்றுகளை உறுதி செய் வதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும் என்றார்.

கவுரவ விருந்தினரான விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை பேசும்போது, “வாழை நார் பயன்பாட்டை பல்வேறு தளங் களுக்கு எடுத்து செல்லும் போது, வாழையின் தேவை அதிகரிப்ப தோடு, அது நேரடியாகவோ, மறை முகமாகவோ வாழை விவசாயி களின் லாபத்தை அதிகரிக்கும்” என்றார்.

திருச்சியிலுள்ள இந்திய மேலாண்மை நிறுவன இயக்குநர் பவன்குமார் சிங், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.செல்வம், தேசிய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் இணை இயக்குநர் பி.கே.பாண்டே, ஜெயின் நீர்ப்பாசன நிறுவனத்தின் தலைவர் அஜித் ஜெயின், பெங்களூரு வேளாண் அறிவியல் மைய தலைமையிட இயக்குநர் வெ.வெங்கடசுப்பிரமணியன், ஒய்எஸ்ஆர் தோட்டக்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜானகிராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் தேசிய அளவில் வாழை விவசாயத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்து வரும் விவசாயிகள், பெண் தொழில் முனைவோர், சிறந்த வேளாண் அறிவியல் மையம், உழவர் ஆர்வலர் குழு, சிறப்பாக தொழில் பரவலாக்கம் செய்தவர்கள், சிறந்த தொழில் முனைவோர் போன்றோருக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in