Published : 23 Aug 2021 03:14 AM
Last Updated : 23 Aug 2021 03:14 AM

மன்னார்குடி புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும்: தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தல்

திருவாரூர்

மன்னார்குடியை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மன்னார்குடி கிளைக் கூட்டம் நேற்று மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், மன்னார்குடி பொறுப்பாளருமான பி.நாகராஜ் தலைமை வகித்தார். இதில், நிர்வாகிகள் சுவாமிநாதன், ராம்குமார், சேதுராமன், பாபு, வெங்கடேஷ், ராமகிருஷ்ணன், ரகு, ரவி சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலின் பெருமையையும், மன்னார்குடியில் வாழ்ந்து மறைந்த மன்னார்குடி பெரியவாள் என்று அழைக்கப்படும் வேத விற்பன்னர் ராஜூ சாஸ்திரிகளின் பெருமையையும் அங்கீகரிக்கும் விதமாக மன்னார்குடியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கும்போது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, நிலுவையில் உள்ள முத்துப்பேட்டை வருவாய் வட்ட அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதுடன், வடுவூர், மதுக்கூர், வடசேரி ஆகிய ஊர்களை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டங்களையும் அறிவித்து, மன்னார்குடி மாவட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும். மன்னார்குடி மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையை தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x