

பாய்மரப் படகு மூலம் உலக சுற்றுப்பயணம் செய்யவுள்ள கடற்படை வீராங்கனைகள் அதன் முன்னோட்டமாக நேற்று சென்னை வந்தனர். அவர்களுக்கு கடற்படை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியக் கடற்படையில் சேர இளைஞர்களை ஈர்க்கும் வகை யில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத் தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெண்களை இத்துறையில் ஈர்ப்பதற்காக முதன்முறையாக கடற்படையைச் சேர்ந்த வீராங் கனைகள் உலக சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இதற்காக இந்தியக் கடற்படை யைச் சேர்ந்த வர்த்திகா ஜோஷி தலைமையில் பிரதிபா ஜான்வால், ஸ்வாதி, விஜயாதேவி, பாயல் குப்தா ஆகிய 5 பேர் ‘மதே’ என்ற பாய்மரக் கப்பல் மூலம் நேற்று சென்னை வந்தனர். அவர்களை தென்பிராந்திய கடற்படை அதிகாரி அலோக் பட்நாகர் வரவேற்றார். பின்னர் வர்த்திகா ஜோஷி நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியக் கடற்படை சார்பில் என் தலைமையில் 5 பேர் அடுத்த ஆண்டு முதன்முறையாக உலக சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளோம். இப்பயணத்தின் முன்னோட்டமாக நாங்கள் கடந்த 9-ம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு சென்னை வந்துள்ளோம். வரும் 17-ம் தேதி கொச்சி சென்று பின்னர் அங்கிருந்து கோவா சென்றடை வோம்.
கடற்படையில் சேர்வது குறித்து பெண்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்துவதே இப்பயணத்தின் முக்கிய நோக் கம். இந்த பாய்மர படகில் சாட்டிலைட் போன், தண்ணீர் சுத்திகரிப்பு கருவி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன. இதனால் பய ணத்தின்போது எங்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது.
இவ்வாறு வர்த்திகா ஜோஷி கூறினார்.