அரக்கோணம் தடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில்கள் சேவை 185-ஆக அதிகரிப்பு

அரக்கோணம் தடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில்கள் சேவை 185-ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

சென்னை - அரக்கோணம் தடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இன்றுமுதல் மின்சார ரயில்கள் சேவை 185 ஆக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தேவைக்கேற்ப, மின்சார ரயில்கள் அதிகரித்து இயக்கப்படுகின்றன. அந்த வகையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, இன்று (ஞாயிறு) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில்கள் அதிகரித்து இயக்கப்படவுள்ளன. அதன்படி, சென்னை கடற்கரை - ஆவடி 2,ஆவடி - சென்னை கடற்கரை 2,சென்னை கடற்கரை - திருவள்ளூர் 6, திருவள்ளூர் - சென்னை கடற்கரை 6, சென்னை சென்ட்ரல் - திருத்தணி 2, திருத்தணி - சென்னை சென்ட்ரல் 2 என ரயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை - அரக்கோணம் தடத்தில் ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமைகளில் 165 ஆக இருந்த ரயில்கள் சேவை தற்போது 185 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே கூட்ட நெரிசலைத் தவிர்த்து,கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in