கலைஞர் நூலகம் அமையும் இடத்தில் உள்ள மரங்களை மாற்று இடத்தில் நட முடிவு

மதுரை - நத்தம் சாலையில் கலைஞர் நூலகம் அமையவுள்ள இடத்தில் மரங்களை அகற்றி வேறு இடத்தில் நடுவதற்காக பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடக்கிறது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை - நத்தம் சாலையில் கலைஞர் நூலகம் அமையவுள்ள இடத்தில் மரங்களை அகற்றி வேறு இடத்தில் நடுவதற்காக பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடக்கிறது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ரூ.70 கோடியில் அமைக் கப்படும் என தமிழக அரசு அறி வித்துள்ளது.

இந்த நூலகத்தை மதுரையில் நத்தம் சாலை பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை இடத்தில் அமைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த இடத்தை தேர்வு செய்ததும், இந்த இடத்தில் பென்னி குவிக் வாழ்ந்த கட்டிடம் இருப்பதாகக் கூறி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதும் தற்போது நூலகம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

அங்கிருந்த கட்டிடங்கள் இடிக் கப்பட்ட நிலையில் 50-க்கும் மேற்பட்ட பெரிய மரங்களை வேரோடு அப்புறப்படுத்தி வேறு இடத்தில் நட இயற்கை ஆர்வ லர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனால், தற்போது மரங்களை வேருடன் அப்புறப்படுத்தி மாற்று இடத்தில் நடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. கிளைகள் அகற்றப்பட்டு வேர் பகுதிகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு வரு கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in