

மக்கள் சமூக நீதிப்பேரவை சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு ‘பெரியார் மண் மீட்ட தமிழ் மானப் போராளி’ விருது வழங்கும் விழா, பாராட்டு விழா திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
மக்கள் சமூக நீதிப்பேரவையின் அமைப்பாளர் ரா.மனோகரன் விழாவுக்கு தலைமை வகித்து, திருமாவளவனுக்கு விருது வழங்கினார்.
பின்னர் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தர் உள்ளிட்டோர் பேசும்போது, ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடக்கூடியவர். தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வருபவர்.
குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்குமான சமூக நீதிக்காக போராடக்கூடியவர்’ என திருமாவளவனைப் பாராட்டினர். திருமாவளவன் ஏற்புரையாற்றி னார்.
இந்நிகழ்ச்சியில் முசிறி எம்எல்ஏ காடுவெட்டி ந.தியாகராஜன், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.