Published : 13 Feb 2016 08:50 AM
Last Updated : 13 Feb 2016 08:50 AM

காமராஜர் பல்கலை.யில் 442 பேருக்கு முனைவர் பட்டங்கள்: ஆளுநர் ரோசய்யா வழங்கினார்

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் 442 பேருக்கு முனைவர் பட்டங்களை ஆளுநர் கே.ரோசய்யா வழங்கினார்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் 49-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக மு.வ.அரங் கில் நேற்று நடைபெற்றது. அறி வியல் துறையில் 175 பேர், கல்வி யியல் துறையில் 14 பேர், வணிக வியலில் 73 பேர், வணிகவியல் நிர்வாகவியல் துறையில் 29 பேர், கலையியல் துறையில் 151 பேர் என மொத்தம் 442 பேருக்கு முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டன. இது தவிர இளங்கலை, முதுகலை, மொழி பாடத்தில் முதலிடம் பெற்ற 68 மாணவ - மாணவிகளுக்குப் பதக்கங்கள், பரிசுகள் வழங்கப்பட் டன. இவர்களுக்கு தமிழக ஆளு நரும் வேந்தருமான கே.ரோசய்யா இவ்விழாவில் பட்டங்களை வழங் கினார். பல்வேறு கல்லூரிகள், தொலைநிலை கல்வி இயக்ககத் தில் பயின்ற 29,176 மாணவர் கள் உட்பட 64,226 பேர் பட்டங் களுக்கு உரியவர்கள் என அறிவிக் கப்பட்டனர்.

இவ்விழாவில் குஜராத் அர சின் முன்னாள் தலைமை செயலர் டி.ஜெ.பாண்டியன் பேசுகையில், ’’அனைத்து துறைகளிலும் நாடு சந்திக்க உள்ள சவால்களை திறமை யாக எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்கும் கடமை பல்கலைக்கழகங்களுக்கு உண்டு. மாணவர்கள் தங்களை திறன் மிக்கவர்களாக உருவாக்கிக் கொண்டு நாட்டின் மேம்பாட்டுக்கு தொண்டாற்ற வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x