

புதுச்சேரிக்கு நேற்று பிரியங்கா ரகசியமாக காரில் வந்தார். போலீ ஸார் அவரை ரகசியமாக பின்வாசல் வழியாக ஹோட்டலுக்குள் அழைத்துச் சென்றனர். அவர் தனது குழந்தைகளின் விளையாட்டை பார்க்க வந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுச்சேரியில் அகில இந்திய அளவிலான சப் ஜூனியர் கூடைப் பந்து போட்டி நேற்று (2-ம் தேதி) தொடங்கி 8-ம் தேதி வரை நடக் கிறது. இந்த போட்டியில் 25 மாநிலங் களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின் றனர். இந்த போட்டிகளில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பேரக் குழந்தைகளும், பிரியங்கா வதேராவின் குழந்தைகளுமான ரோகன் வதேரா, நீராயா ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக, தனது குழந்தைகளுடன் பிரியங்கா நேற்று டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
பின்னர், அங்கிருந்து கார் மூலம் புதுச்சேரிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்தார். புதுச்சேரி கடற்கரை சாலையில் பழைய நீதிமன்றம் அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு (ஹோட்டல் டி மாகே) நேற்று பிற்பகல் வந் தார். அவரை புகைப்படம் எடுக்க முடியாத வகையில் ஓட்டலின் பின்புறமாக போலீஸார் அழைத்துச் சென்றனர்.
கூடைப்பந்து போட்டி
இது தொடர்பாக போலீஸ் வட்டா ரங்கள் கூறும்போது, "பிரியங்கா வின் மகன் ரோகன் வதேரா, மகள் நீராயா ஆகியோர் புதுச்சேரி வந்துள்ளனர். இருவரும் டெல்லி அணியில் விளையாடுகின்றனர். எனவே, தனது குழந்தைகளின் விளையாட்டை பார்ப்பதற்காக பிரி யங்கா வந்துள்ளார்.
அவரது வருகை முழு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவர் செல்லும் இடங்கள் பற்றிய தகவல்களும் உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே கூறப் பட்டு இருக்கிறது. அவருக்கு முழு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது" என்றனர்.
புதுச்சேரி காங்கிரஸ் தரப்பில் கேட்டபோது, "பிரியங்கா வருகை தொடர்பாக கட்சி உயர் மட்டத்தில் இருந்து தகவல் எதுவும் வரவில்லை. இது அவரது தனிப்பட்ட வருகை" என்று குறிப்பிட்டனர்.