

வணிக வரித்துறையில் திருத்தப் பட்ட பணிமூப்பு பட்டியலை வெளி யிடுதல், கூடுதல் ஆணையர் முதல் துணை வணிகவரி அலுவலர் வரை யான பதவிகளுக்கான பதவி உயர்வு வழங்குதல், பணிச்சூழல் தொடர் பான உள்கட்டமைப்பில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு வணிக வரித் துறையில் உள்ள அலுவலர் மற்றும் பணியாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் சென்னையில் நேற்றுமுன்தினம் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
தமிழ்நாடு உதவி ஆணையர் வணிகவரி அலுவலர் மற்றும் துணை வணிகவரி அலுவலர் சங்கத்தின் சென்னை கோட்டத் தலைவர் என்.சுயம்பிரகாசம் வரவேற்றார். இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.ராஜேந்திரன், தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்க மாநிலத் தலைவர் என்.ஜனார்த்தனன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
உண்ணாவிரதத்தை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் இரா.பால சுப்பிரமணியன் தொடங்கி வைத் தார். இதன் மாநிலத் தலைவர் ஆர்.தமிழ்செல்வி வாழ்த்துரை வழங்கினார்.
தமிழ்நாடு உதவி ஆணையர் வணிகவரி அலுவலர் மற்றும் துணை வணிகவரி அலுவலர் சங்கப் பொதுச் செயலாளர் க.லட்சுமணன், தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கப் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜ ராஜேஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக் கிப் பேசினர். நிறைவில், தமிழ் நாடு வணிகவரி பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் டேனியல் நன்றி கூறினார். இந்த உண்ணா விரதப் போராட்டத்தில் வணிகவரித் துறையின் இணை ஆணையர்கள் முதல் பதிவுறு எழுத்தர்கள் வரை யிலான பணியாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று இரண்டாவது நாளாக காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டம் நீடித்தது.
இதுகுறித்து வணிகவரித் துறை துணை ஆணையர்கள் கே.அருண்குமார், ஏ.என்.வீரேசலிங் கம் ஆகியோர் கூறும்போது, “வணிகவரித் துறையில் முதுநிலை நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆய்வு செய்து முடிவு எடுப்பதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 5 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை அரசு அமைத்தது. அதையடுத்து குழு எடுத்த முடிவுகளின்படி, வணிக வரித்துறை ஆணையர் ஒரு வரைவு அறிக்கையை அரசுக்கு அளித்தார். அதன் அடிப்படையில், வணிக வரித்துறை செயலாளர் அரசாணை வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால் முதுநிலை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். எனவே, திருத்தப்பட்ட பணிமூப்பு பட்டியலை வெளியிடு தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தனர்.