மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில் இருந்து ஐபிஎஸ், ரயில்வே பாதுகாப்பு பணிக்கு விலக்கு: மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் அறிவிப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில் இருந்து ஐபிஎஸ், ரயில்வே பாதுகாப்பு பணிக்கு விலக்கு: மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் அறிவிப்பு
Updated on
1 min read

மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் இருந்து ஐபிஎஸ், மத்திய போலீஸ் படைகள், ரயில்வே பாதுகாப்பு படைகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக மத் திய அரசு அறிவித்துள்ளது.

இந்தப் பணிகளின் களயதார்த்தத்தை கருத்தில்கொண்டு,இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதவற் காக, அரசுப் பணிகளில் அவர் களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 'மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்2016’-இன் கீழ் இந்த இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மத்திய,மாநில அரசுகளின் அனைத்துப் பணிப் பிரிவுகளிலும் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளி கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த மாற்றுத் திறனாளிகள் இடஒதுக்கீட்டில் இருந்து சில பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகார மளித்தல் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது:

ஐபிஎஸ், ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், பிஎஸ்எப், இந்தோ - திபெத் எல்லைக் காவல் படை,அசாம் ரைபிள்ஸ், சஷாஸ்த்ரா சீமா பல் ஆகிய மத்திய போலீஸ்படைகளுக்கும் மாற்றுத்திறனாளி களுக்கான இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படு கிறது. டெல்லி, அந்தமான் - நிகோபார், லட்சத்தீவுகள், டையு - டாமன், தாத்ரா - நகர்ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களின் காவல் பணிகளுக்கும் மாற்றுத் திறனாளிகள் இடதுக்கீட் டில் விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பணிகளின் கள யதார்த்தத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திற னாளிகளுக்கான தலைமை ஆணையரிடம் கலந்தாலோசித்த பிறகே இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இவ்வாறு அந்த அறிவிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மத்திய அரசின்இந்த நடவடிக்கைக்கு மாற்றுத் திறனாளிகள் நல அமைப்புகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இதுதொடர்பாக மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான தேசிய தளத்தின் (என்பிஆர்டி) தலைவர் முரளிதரன் கூறும்போது, “மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-இல் சில விலக்குகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

அதாவது, காவல் உள்ளிட்ட பணிகளில் களத்தில் இறங்கி சண்டையிடுவது போன்ற பிரிவுகளில் மாற்றுத்திறனாளிகளை நியமிப்பதில் விலக்கு உள்ளது. அதே சமயத்தில், அந்த துறைகள் சார்ந்த மற்ற பணிகளில் அவர்களை நியமிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது, இந்த துறைகளில் மாற்றுத்திறனாளிகள் நுழைவதை முற்றிலும் தடுக்கும் வகையில் உள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in