Published : 21 Aug 2021 07:01 AM
Last Updated : 21 Aug 2021 07:01 AM

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை: ஊரகத் தொழில் துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் முன்னிலை வகித்தனர்.

பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,543 படுக்கை வசதிகள் உள்ளன. இவற்றில் 680 படுக்கைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 525 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்பு வசதி கொண்டவை. மேலும், ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய 165 தீவிர சிகிச்சைக்கான படுக்கைகளும் உள்ளன.

இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு ஆகியவற்றின் மூலம் ரூ.1.5 கோடி மதிப்பில் 1,000 எல்.பி.எம். உற்பத்தித் திறன் கொண்டஆக்சிஜன் உற்பத்தி ஆலை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் 120 நோயாளிகள் பயனடைவர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், உதவி காவல்கண்காணிப்பாளர் ஆதார்ஸ் பச்சேரா, முன்னாள் எம்எல்ஏ-க்கள்தமிழ்மணி, இதயவர்மன், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x