Published : 20 Aug 2021 10:36 AM
Last Updated : 20 Aug 2021 10:36 AM

கோரிக்கையை ஏற்று சாதாரணப் பயணிகள் ரயில்களை இயக்க நடவடிக்கை: ரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன் நன்றி

ரயில்வே அமைச்சருடன் எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, சு.வெங்கடேசன்: கோப்புப் படம்.

சென்னை

கோரிக்கையை ஏற்று சாதாரணப் பயணி வண்டிகளை இயக்க ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதற்கு, ரயில்வே அமைச்சருக்கு மக்களவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சு.வெங்கடேசன் எம்.பி. இன்று (ஆக. 20) தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

"இந்திய ரயில்வே சாதாரணப் பயணி வண்டிகளை இயக்காமல் இருப்பதால், இந்திய ரயில்வே முழுவதும் அடித்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனைச் சுட்டிக்காட்டி அவற்றை இயக்கிட ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு நான் கடிதம் எழுதினேன். ரயில்வே அமைச்சரை நானும், வடசென்னை தொகுதி எம்.பி. கலாநிதி வீராசாமியும் நேரில் வலியுறுத்தினோம்.

இப்போது ரயில்வே வாரியம் இந்திய ரயில்வே முழுவதும் உள்ள ரயில்வே பயணி போக்குவரத்து அதிகாரிகளைப் பயணி வண்டிகளை மெமு, டெமு, பாரம்பரிய பழைய பயணி வண்டிகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திட வசதியாக ஏற்பாடுகளைச் செய்திடவும், அவற்றுக்கான கால அட்டவணைகளை அனுப்பி வைத்திடவும் ரயில்வே வாரியம் அனைத்து ரயில்வேக்களையும் கோரியுள்ளது.

தெற்கு ரயில்வேயில் பயணி போக்குவரத்து அதிகாரி தெற்கு ரயில்வே முழுவதும் அனைத்துக் கோட்டங்களிலும் அதற்கான கால அட்டவணைகளைத் தயாரித்து அனுப்புமாறு கேட்டுள்ளார். அனைத்துக் கோட்டங்களும் அதற்கான அட்டவணைகளை அனுப்பி வைத்துள்ளனர்.

விரைந்து பயணி வண்டிகள் இந்தியா முழுவதும் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

ரயில்வே அமைச்சருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x