Published : 20 Aug 2021 06:39 AM
Last Updated : 20 Aug 2021 06:39 AM
கடந்த 2011-ம் ஆண்டு திரைப்பட இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா நடித்த ’அவன் இவன்’ திரைப்படம் வெளியானது. இதில் நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் பற்றியும், சிங்கம்பட்டி ஜமீன்தார் பற்றியும் அவதூறாக சித்தரிக்கப்பட்டதாகக் கூறி, சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்த சங்கராத்மஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.
நடிகர் ஆர்யா தரப்பில், படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்கு வருத்தம் தெரிவித்ததை அடுத்து வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். பாலா மீதான விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இயக்குநர் பாலா நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். நீதித் துறை நடுவர் கார்த்திகேயன் நேற்று அளித்த தீர்ப்பில், `அவன் இவன்’ படத்தில் ஜமீன் குறித்தோ, சொரிமுத்து அய்யனார் கோயிலைபற்றியோ அவதூறு பரப்பியதாக எவ்வித ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை. இயக்குநர் பாலா விடுவிக்கப்படுகிறார்’ என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT