தாளாளர் வாசுகி உட்பட 4 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி

தாளாளர் வாசுகி உட்பட 4 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி
Updated on
1 min read

எஸ்விஎஸ் கல்லூரி 3 மாணவிகள் உயிரிழந்த வழக்கில் கல்லூரி தாளாளர் வாசுகி, அவரது கணவர் சுப்ரமணியன், மகன் ஸ்வாகத் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி, கல்லூரி ஆலோசகர் பெரு.வெங்கடேசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் சிகிச்சை பெற்று வரும் சுப்ரமணியனை தவிர 4 பேரும் சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 4 பேரையும் ஜாமீனில் விடுவிக்கக் கோரி வாசுகி தரப்பில் இருந்து விழுப்புரம் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி சரோஜினிதேவி 4 பேரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in