மொஹரம் நிகழ்வையொட்டி இந்து - முஸ்லிம்கள் நடத்திய தீமிதி நிகழ்வு

விழுப்புரம் அருகே மரகதபுரம் கிராமத்தில் இந்து - முஸ்லிம்கள் ஒற்றுமையாக நடத்திய தீ மிதி நிகழ்வில் பங்கேற்றோர்.
விழுப்புரம் அருகே மரகதபுரம் கிராமத்தில் இந்து - முஸ்லிம்கள் ஒற்றுமையாக நடத்திய தீ மிதி நிகழ்வில் பங்கேற்றோர்.
Updated on
1 min read

விழுப்புரம் அருகே மரகதபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் மொஹரம் நிகழ்வையொட்டி அங்குள்ள மசூதி முன்பு தீமிதி நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு இந்த தீ மிதி நிகழ்வு கரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி நடைபெற்றது. இதற்காக மசூதியை சுற்றிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவு 11 மணியளவில் மசூதியின் உள்ளே முஸ்லிம்களும், இந்துக்களும் ஒன்று கூடி வெற்றிலை, பாக்கு, ஊதுவர்த்திகள் ஆகியவற்றை வைத்து சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட்டனர்.

பின்னர் இரவு 11.30 மணியளவில் முஸ்லிம்கள் அருகில் உள்ள தென்பெண்ணையாற்றுக்கு சென்று, புனித நீராடிவிட்டு மீண்டும் மசூ திக்கு வந்தனர். தொடர்ந்து மசூதி முன்பு இருந்த தீக்குண்டத்தில் முஸ்லிம் பெரியவர் ஒருவர் இறங்கினார்.

அப்போது அவருக்கு வலது புறம் இந்து மதத்தை சேர்ந்த ஒருவரும், இடதுபுறம் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரும் அவருடன் தீக்குண்டத்தில் இறங்கினர்.

இவர்களைத் தொடர்ந்து இரு மதத்தினரும் தீக்குண்டத்தில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

பின்னர் அவர்கள் மரகதபு ரத்தில் உள்ள அனைத்து வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, மரகதபுரம் கிராமத்தினர் அவர்களது காலில் விழுந்து வணங்கினர்.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இந்துக்கள், முஸ்லிம்கள் சமூக இடைவெளியை பின்பற்றி இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in