சிவகங்கையில் மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்?- பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இடைத்தரகர் மீது தாக்குதல்: காரைக்குடி டிஎஸ்பி தீவிர விசாரணை

சிவகங்கையில் மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்?- பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இடைத்தரகர் மீது தாக்குதல்: காரைக்குடி டிஎஸ்பி தீவிர விசாரணை
Updated on
1 min read

பாலியல் தொழிலில் கட்டாயப் படுத்தி தங்களை ஈடுபடுத்த முயற்சித்த இடைத்தரகரை பெண் கள் தாக்கும் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர் பாக காரைக்குடி டிஎஸ்பி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்தவர் ராஜா. இவர், அறந்தாங்கி, திருச்சி ஆகிய இடங்களில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி தரும் நிறுவனத்தை நடத்தி வரு கிறார். தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் சிலரை மதுப்பழக்கத்துக்கு அடிமை யாக்கி பாலியல் தொழிலில் இவர் ஈடுபடுத்தி இடைத்தரகராகச் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அதற்கு உடன்படாத பெண்களுக்கு மிரட்டல் விடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன் றுள்ளார் என தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் கள், இடைத்தரகராக செயல்பட்ட ராஜாவை காரைக்குடி அருகே அமராவதிபுதூர் பகுதிக்கு வர வழைத்து சரமாரியாகத் தாக் கினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பெண் ஒருவரை பாலியல் தொழிலுக்கு வருமாறு ராஜா அழைத்த ஆடியோவும் வெளியானது.

இதற்கிடையே தன்னை சிலர் தாக்கி பணத்தைப் பறித்துக் கொண்டதாக சாக்கோட்டை காவல் நிலையத்தில் ராஜா புகார் தெரிவித்தார். அங்கு பணிபுரியும் காவலர் ஒருவர், ராஜாவை தாக்கியதாகக் கூறப்படும் பெண்களை போனில் தொடர்பு கொண்டு கோபமாக பேசியுள்ளார். ராஜாவுக்கு ஆதரவாக காவலர் பேசிய ஆடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வெளி யாகியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பிசெந்தில்குமார் கவனத்துக்கு வந் தது. இந்த சம்பவம் குறித்து விசா ரணை நடத்த காரைக்குடி டிஎஸ்பி வினோஜிக்கு உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி பகுதியில் இளம் பெண்களை மிரட்டி இளை ஞர்கள் பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தைப் போன்று, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ராஜாவும், அவருக்கு பின்னணியில் உள்ள கும்பலும் இளம் பெண்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கலாம் என சந் தேகிக்கப்படுகிறது. இது தொடர் பாக டிஎஸ்பி தலைமையிலான போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in