Published : 19 Aug 2021 02:43 PM
Last Updated : 19 Aug 2021 02:43 PM

ஆக.21, 22-ம் தேதிகளில் 12 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 21, 22-ம் தேதிகளில் 12 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் முனைவர்‌ நா.புவியரசன்‌ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும்‌ வெப்பச் சலனம்‌ காரணமாகத் தமிழ்நாட்டில்‌

19.08.2021:

நீலகிரி, கோயம்புத்தூர்‌, வட கடலோர மாவட்டங்கள்‌, தென்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

20.08.2021:

நீலகிரி, கோயம்புத்தூர்‌, தென்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

21.08.2021:

தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, பெரம்பலூர்‌, அரியலூர்‌, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்‌, ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌.

22.08.2021:

திருச்சிராப்பள்ளி, மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்‌.

23.08.2021:

உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்‌.

சென்னையைப் பொறுத்தவரை

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும். நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்''‌.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x